பட்ஜெட் 2024: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தில் புதிதாக 3 கோடி வீடுகள் கட்டப்படும்!


இந்தியாவில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் கிராமங்களில் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில் 2024 - 2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது அவர் பேசுகையில்," 500 முன்னணி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 5 கோடி இளைஞர்கள் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். இதில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்பவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும். பயிற்சி செலவுகளை நிறுவனங்கள் அவற்றின் சிஎஸ்ஆர் ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொள்ள வேண்டும். முத்ரா கடன் தொகை வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டடுள்ளது.

முத்ரா கடன் தொகை வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிரெடிட் கேரன்டி திட்டத்தின் கீழ், உற்பத்தி துறையில் உள்ள நிறுவனங்களுக்கு 100 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும். கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களுக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகரங்கள், கிராமங்களில் 3 கோடி வீடுகள் கட்டப்படும்" என்று கூறினார்.

x