பட்ஜெட் 2024-25: விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; பீகார், ஆந்திராவுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு


புதுடெல்லி: 2024-2025 பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பீகார், ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024-2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது: உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும். பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணிபுரியும் பெண்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு தங்கும் விடுதி அமைக்கப்படும். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பீகார் மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை-விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.”

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் உரையாற்றி வருகிறார்.

x