1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறை குறித்த பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், 2024 - 2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்.

அப்போது அவர்,"தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள நிலையில், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் மூன்றாவது முறையாக தேர்தலில் கிடைத்த வெற்றியாகும்.

பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் . அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ரூ‘2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 5 முக்கிய திட்டங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்புக்கு ரூ. 1.48 லட்சம் கோடி ரூபாயும், 4 கோடி பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்படும். பண வீக்கம் 4 சதவீதமாக குறையும்" என்றார்.

x