குழந்தையின்மையால் கவலை: கருத்தடை மாத்திரையை சாப்பிட்டு தம்பதி தற்கொலை


குழந்தை இல்லாமல் தனியாக தவித்து வந்த வயதான தம்பதியர் கருத்தடை மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தாவண்கெரே மாவட்டம், நியாமதி தாலுகா மல்லிகேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பா(65).இவரது மனைவி இந்திரம்மா(50). இவர்களுக்கு குழந்தை இல்லை. அத்துடன் தம்பதியர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்தனர். தங்களைப் பராமரிக்க யாரும் இல்லாததால் தற்கொலை செய்துள்ள இருவரும் முடிவு செய்தனர்.

இதன்படி சண்முகப்பா, இந்திரம்மா ஆகிய இருவரும் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட்டனர். இதனால் இருவரும் மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் சண்முகப்பாவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திரம்மாவும் இன்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நியாமதி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத கவலையில் வயது முதிர்த்த தம்பதியர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x