திருப்பதி கோயிலில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள்? - தேவஸ்தானம் ஆலோசனை


திருப்பதி

புதிய வகை கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கோவிட் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

புதிய வகை கரோனா வைரஸ் வேகமாக சீனாவில் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பதி கோவிலில் தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தரும் நிலையில் அங்கு மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி கோயிலில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளில், கரோனா கட்டுப்பாடுகளை பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தரிசனத்திற்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பு ஊசிகளை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

x