கர்நாடகாவில் ஜூலை 24-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவின் கடலோர மற்றும் தெற்கு உள்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் கடலோர மற்றும் மலைப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கனமழை காரணமாக ஆறுகளில் மட்டம் உயர்ந்துள்ளதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாலைகள், பாலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை ஜூலை 24-ம் தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, குடகு, ஷிமோகா ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாசன், பெல்காம் ஆகிய மாவட்டங்களுக்கு, ஆரஞ்சு அலர்ட்டும், பிதர், கலபுர்கி, யாத்கிரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.