பூஜா கேத்கரின் தேர்வை ரத்து செய்ய யுபிஎஸ்சி முடிவு


பூஜா கேத்கர்

புதுடெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் தன்னுடைய மற்றும்தன் பெற்றோர்களின் அடையாளத்தைப் போலியாக சமர்ப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால், அவர் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும், அவர் ஐஏஎஸ்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்துசெய்வது குறித்தும், அவர் இனி குடிமைப் பணித் தேர்வுஎழுதுவதற்கு தடை விதிப்பது குறித்தும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளோம். இவ்வாறு யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

புனே மாவட்டத்தின் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பூஜா கேத்கர் தனது சொந்த காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தான் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவரென்றும் தனக்கு பார்வை மற்றும் மன இறுக்கக் குறைபாடு உள்ளதாகக் கூறி மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே பூஜாவின் தாயார் மனோரமா, விவசாயிகள் சிலரை துப்பாக்கியால் மிரட்டும் வீடியோ வெளியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

x