கன்னடர் இடஒதுக்கீடு மசோதா: கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சசி தரூர் கடும் கண்டனம்


சசி தரூர்

புதுடெல்லி: தனியார் வேலைவாய்ப்பில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை, கடும் எதிர்ப்பால் கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கூறியதாவது: கர்நாடக அரசு என்ன நினைக்கிறது, எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தது என்று தெரியவில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்தினால் அங்குள்ள தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும்.

ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்தால், அது அரசியல் சாசனத்திற்கு எதிராக அமையும். நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழவும், வேலை செய்யவும், பயணம் செய்யவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. ஹரியாணா அரசின் இதுபோன்ற மசோதாவை அம்மாநில உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துள்ளது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.

x