ரூ.1,392 கோடி மோசடி: காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை


சண்டீகர்: ரூ.1,392 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மோசடி வழக்கில் ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ ராவ் டான் சிங், உலோகத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

ஹரியாணா மாநிலம், மகேந்திரகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராவ் டான் சிங் (65), அவரது மகன் அக்ஷத் சிங், அலைட் ஸ்ட்ரிப்ஸ் லிமிடெட் (ஏஎஸ்எல்) நிறுவனம், அதன் நிர்வாகிகள் மொஹிந்தர் அகர்வால், கவுரவ் அகர்வால் மற்றும் சிலர் தொடர்புடைய வளாகங்களில் அமலாக்கத் துறை சோதனை இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது.

மகேந்திரகர், பகதூர்கர், குருகிராம், டெல்லி மற்றும் ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட இவர்கள் தொடர்புடைய சுமார் 15 இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏஎஸ்எல் நிறுவனம் சுருள் எஃகு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ரூ.1,392 கோடி வங்கிக் கடன் மோசடி புகாரில், கடந்த 2022ம் ஆண்டு முதல் சிபிஐ வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறது.

எம்எல்ஏ ராவ் டான் சிங்கின் குடும்பத்தினரும், அவரது நிறுவனங்களும் ஏஎஸ்எல் நிறுவனத்திடமிருந்து கடன் பணத்தைப் பெற்றனர். ஆனால் மீண்டும் அதனை திரும்ப செலுத்தவில்லை. அதன் பின்னர் இந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

x