மதுரை மீனாட்சியம்மன் கோயில் நாளை மூடப்படுகிறது: 22 உபகோயில்களையும் மூடக்காரணம் என்ன?


மதுரை மீனாட்சியம்மன் கோயில் நாளை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த கோயில் நாளை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்", நவ.8-ம் தேதி பிற்பகல் நேரத்தில் 2.39 மணி அளவில் தொடங்கி மாலை 6.19 மணி வரை நிகழ இருக்கின்ற சந்திர கிரகணத்தினையொட்டி , அன்றைய தினம் கோயிலில் காலை 9.30 மணி தொடங்கி இரவு 7.30 மணி வரையிலும் சுந்தரேசுவரர் சுவாமி பலகனி மற்றும் மீனாட்சி அம்மன் கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து, அன்றைய தினத்தில் நிகழவிருக்கும் அன்னாபிஷேகம் காலை 7 மணி அளவில் நடைபெறும். இதனுடன் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும் தருணத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இந்த கோயில் மட்டுமின்றி மீனாட்சி அம்மன் கோயிலைச் சார்ந்த மற்ற 22 உபகோயில்களும் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும் " என தெரிவித்துள்ளது.

x