மெட்ரோ ரயிலில் தினமும் 8 லட்சம் பேர் பயணம்: 10 நாட்களில் ரூ.25 கோடி வசூல்


பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் மெட்ரோ ரயிலில் தினமும் 8 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ள நிலையில், 10 நாள் வருமானம் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்தது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியது. இதன் காரணமாக ஐ.டி மற்றும் பெரிய நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கின. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்தனர்.

தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், பெரிய நிறுவனங்கள், ஐ.டி ஊழியர்களை அலுவலகத்தில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவில் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ (நம்ம மெட்ரோ) ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பெங்களூருவில் பணியாற்றும் ஊழியர்கள் பேருந்து, கார், பேருந்தில் சென்றால் போக்குவரத்து பிரச்சினை ஏற்படும் என்பதால் மெட்ரோ ரயிலையே பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், ஐ.டி நிறுவனங்கள் உள்ள வழித்தடங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த பத்து நாட்களாக தினமும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயில் மூலம் பயணித்துள்ளனர். முன்பு தினமும் ஆறரை லட்சம் பயணிகள் தான் மெட்ரோவில் பயணம் செய்து வந்தனர். தற்போது, ​​பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தினமும், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகிறது. இதன் மூலம் கடந்த 10 நாட்களில் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x