நேரலையின் போது ஆற்றுக்குள் விழுந்த செய்தியாளர்: வைரலாகும் வீடியோ


அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து செய்தியை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் ஆற்றில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பத்திரிகையாளருக்கு இரவும், பகலும் தொடர்ந்து பணியாற்றி செய்திகளை வழங்குவது சவாலான வேலை தான். அதற்கு தகுந்த உதாரணம் போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைத் தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் ஆற்று நீரில் விழுந்து தத்தளித்தார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த ஆபத்தில் இருந்து தப்பினார்.

இந்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது. சமீபத்தில் அசாமில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் செய்தி சேகரிக்கச் சென்றார். அதன் பின் அவர் ஆற்றங்கரையில் நின்று மக்களின் பிரச்சினைகளை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்த போது திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் அந்த ஊடகவியலாளர் ஆற்றில் நீந்தி மக்களின் உதவியோடு உயிர் தப்பினார்.

இது தொடர்பாக தெலுங்கு ஸ்க்ரைபின் எக்ஸ் கணக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டது, "அசாமின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிடும் போது ஆற்றில் விழுந்து பத்திரிகையாளர் உயிர் பிழைத்தார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

x