காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக குடகு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 5,000 கனஅடிக்கும் மேலும் என 25,000 கனஅடிக்கும் அதிகமான உபரிநீர், காவிரியில் திறக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, குஷாலங்கரா, சோம்வார்பேட்டை தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.