கஞ்சா போதையில் பெண்கள் விடுதியில் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரி வாலிபரை பிடித்த மாணவிகள், தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியர் பெண்கள் விடுதி உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிவு இந்த விடுதிக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு உறங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கூச்சலிட்டதை அடுத்து விடுதியில் இருந்து இளைஞர் தப்பிச் சென்றார்.
இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த அந்த இளைஞரை மாணவிகள் பிடித்து உதைத்து கீழ்ப்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(22) என்பதும், இவர் எம்எம்சி கல்லூரியில் அனஸ்தீஸியா கிரிட்டிகல் கேர் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். தற்போது அவர் சேத்துப்பட்டு நவரோஜி சாலையில் உள்ள கந்தசாமி ஆண்கள் விடுதியில் தங்கி தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒன்றரை வருடங்களாக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
கஞ்சா போதையில் இருந்த ஸ்ரீகாந்த் நேற்றிரவு கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் புகுந்து இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ர். அப்போது மாணவிகள் சத்தமிட்டதை அடுத்து தப்பி சென்றுதும், அப்போது ஸ்ரீகாந்த் தனது செல்போனை மறந்துவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. விடுதியில் தொலைத்த தனது செல்போனை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் எடுக்க சென்ற போது பெண்களிடம் அவர் சிக்கியது தெரியவந்தது.. இதனையடுத்து ஸ்ரீகாந்த்தை போலீஸார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.