அரசு காலிப்பணியிடங்கள்: வயது வரம்பில் தளர்வு அளிக்க மத்திய அரசு மறுப்பு!


புதுச்சேரியில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் எந்தவித காலிப் பணியிடங்களும் நிரப்ப முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு தர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இது சம்பந்தமாக புதுச்சேரி பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ‘புதுச்சேரி நிர்வாகத்தில் உள்ள குரூப்-பி உள்ளிட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் அதிகபட்ச வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்த்துவதற்கான முன் முடிவை மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடரலாம்.’

‘சட்டத்துறையை கலந்தாலோசித்து வயது தளர்வு தொடர்பாக தீர்ப்பாயம், நீதிமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றிய ஆணைகள் ஏதேனும் இருந்தால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் முடிவு செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x