கர்நாடகாவில் புயல் காற்றுடன் கனமழை: கடலோரப்பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட்!


கர்நாடக கடலோரப் பகுதிகளில் புயல் காற்றுடன் இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 12- ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன்படி கோட்டா, உடுப்பி, கார்கலா, முல்கி, மணி, பனம்பூர், உப்பினங்கடி, குமாதா, பிரம்மவரா, ஷிராலி, அகும்பே, மங்களூரு, தர்மஸ்தலா, கெருசோப்பா, பெல்தங்கடி, காசல்ராக், மாங்கி ஆகிய இடங்களில் நேற்று மழை பெய்தது.

ஹொன்னாவர், சித்தாபூர், ஷோரப்பூர், கமலாப்பூர், தியாகர்த்தி, மாகடி, கொப்பா, சூல்யா, தேவர்ஹிப்பராகி, ஜேவர்கி, மஸ்கி, ஹுமனாபாத், சிருங்கேரி, ஹகரிபொம்மனஹள்ளி, கத்ரா, முனிராபாத், கூடல்சங்கமா, அடகி, தார்வாட், சிந்தனூர், கிருஷ்ணராஜ்பேட்டை, ருன்சடஹோருதே. மூர்நாடு, துமாரி, குப்பி, தாவண்கெரே, உத்தரஹள்ளியில் மழை கொட்டித் தீர்த்து. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பிதர், கலபுர்கி மற்றும் யாத்கிரி மாவட்டங்களில் புயல் காற்றுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கடற்கரையில் மழை தொடரும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, வடக்கு உள்நாடு பெல்காம், பிதர், கடக், கலபுர்கி, யாத்கிரி, தெற்கு உள்நாடு சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

x