மகாராஷ்டிராவில் அதிகாலையில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.