சென்னை ஏர்போர்ட்டில் ராஜநாகம், ஆமை, குரங்கு பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி


சென்னை விமான நிலையத்தில் கொழும்பு மற்றும் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், ராஜநாகம், மலைப்பாம்பு, ஆமை, குரங்கு ஆகியவற்றை சுங்கரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு கொழும்பில் இருந்தும், தாய்லாந்தில் இருந்தும் விமானங்கள் வந்தன. கொழும்பு விமானத்தில் இருந்து வந்த பயணி ஒருவரின் பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது கைப்பையை சோதனை செய்தபோது, பசை வடியில் இருந்த அரை கிலோ 24 கேரட் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 23.26 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த ஒருவரின் பையை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 15 ராஜநாகம் குட்டிகள், ஒரு குரங்கு குட்டி, 5 மலைப்பாம்பு குட்டிகள், 2 ஆமைகள் இருந்தது தெரியவந்தது.

தாய்லாந்து நிறுவனமான தாய் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். தங்கம் மற்றும் விலங்குகளை கடத்தி வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x