ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் ராஜோரி அருகே பர்கலில் உள்ள ராணுவ முகாமின் வேலியை இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர். அப்போது, திடீரென இந்திய ராணுவ வீரர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லட்சுமணன் ஆகிய மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில், தமிழக ராணுவ வீரரான மதுரை மாவட்டம் டி. புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்ததுள்ளார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் பகுதியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தற்கொலை படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி இருப்பதாக பாதுகாப்பு துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.