பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலக ஊழியர்களின் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார்.
வட இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் விழா இன்று மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது சசோதரர்களின் கையில் சகோதரிகள் ராக்கி கயிறினை கட்டி தங்களின் சகோதரத்துவ அன்பினை வெளிப்படுத்துவார்கள்.
இந்த சூழலில், இன்று பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பியூன்கள், தூய்மைப்பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள், ஓட்டுநர்களின் குழந்தைகள், பிரதமரின் இல்லத்தில் அவரின் கையில் ராக்கி கயிறினை கட்டி மகிழ்ந்தார்கள். குழந்தைகள் கட்டிய கயிறுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பிரதமர், அவர்களுக்கு ஆசிகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் விழாவை சிறப்பாக கொண்டாடுவார். இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரக்ஷா பந்தன் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட குஜராத்தை சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரை சந்தித்து அவரின் கைகளில் ராக்கி கயிறினை கட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.