அதிவேகத்தில் பரவும் ஒமைக்ரான் துணைத் திரிபு: டெல்லியில் கண்டறியப்பட்டது


ஒமைக்ரான் வைரஸின் புதிய துணைத் திரிபு டெல்லியில் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மரபணு வரிசைமுறை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 90 மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில், இன்று இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது. இது ‘பிஏ-2.75’ வகை துணைத் திரிபு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் (எல்.என்.ஜே.பி) மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் ஊடகங்களிடம் பேசுகையில், ”இந்தத் துணைத் திரிபு அதி வேகமாகப் பரவக்கூடியது. உடலில் ஆன்டிபாடிகள் கொண்டிருப்பவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் போன்றோருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

x