இதழியல் படித்தால் தான் இனி ஏபிஆர்ஓ வேலை: டிஎன்பிஎஸ்சி மூலம் தான் நடக்கும் தேர்வு!


செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி (ஏபிஆ்ர்ஓ) பணிகளில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவர்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறை தான் மேற்கொண்டு வருகிறது. அந்த துறையில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணி நியமனம் இதுவரை நேரடியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எந்த கட்சி ஆளுங்கட்சியாக வருகிறதோ அந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அறிவித்துள்ளது.
இதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியில் சேருவோர் இதழியல் படிப்பு படித்திருப்பதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி இதழியல், மாஸ் கம்யூனிகேசன், விசுவல் கம்யூனிகேசன், மக்கள் தகவல் தொடர்பு, விளம்பரம்,மல்டி மீடியா, மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும். மக்கள் தொடர்பு அலுவலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.பிஜி டிப்ளமோ இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படித்திருக்க வேண்டும். கணினியில் டைப்ரைட்டிங், தமிழ், ஆங்கிலம் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

x