பண்டிகை காலம் நெருங்குகிறது; கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - எச்சரிக்கும் மத்திய அரசு


கரோனா பரிசோதனை

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கரோனா கட்டுப்பாடு தொடர்பாக தொற்று அதிகமாக உள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இதில், பண்டிகை காலம் நெருங்குவதால் கரோனா தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்குமாறும் மாநில அரசுகளுக்கு இந்த கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,406 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 49 பேர் கரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது 1,34,793 பேர் கரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறது.

x