அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்: இலங்கையில் 2 மாதங்களில் 23 பேர் பலி


அமெரிக்காவைப் போல இலங்கையிலும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 23 பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பள்ளி வளாகம், வணிக வளாகங்களில் திடீரென நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இது போல இலங்கையில் திடீரென துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 23 பேர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பலியான அதிர்ச்சி தகவலை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையைச் சேர்ந்த எஸ்எஸ்பி நிஹால் தல்துவா தெரிவிக்கையில், " இலங்கையில் கடந்த மே 30-ம் தேதி முதல் நேற்று (ஆக.4) வரை 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களில் 23 பேர் பலியாகியுள்ளனர். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கூலிப்படையினரிடையே இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ளனர். நேற்று மூன்று துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வாளகத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மேலும் லுனுகம்வெஹேர மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று கூறினார்.

x