கேரளாவை மிரட்டும் குரங்கு அம்மை: இன்று மேலும் ஒருவருக்கு பாதிப்பு!


கேரளாவில் இன்று மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 27 -ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் பகுதியை சேர்ந்த இவர், ஜூலை 27-ம் தேதி கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தார்.

இவருக்கு இருந்த குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததால், இவரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை தனிமையில் இருக்கும்படியும் அரசு அறிவுறுத்தியது. ரத்த மாதிரியின் முடிவுகள் வெளிவந்ததை தொடர்ந்து இன்று அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இவருக்கு மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இவருடன் தொடர்பில் இருந்த தாய், தந்தை உட்பட நான்கு பேரையும் தனிமைப்படுத்தி, சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. ஏற்கனவே 4 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

x