அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரிப்பு!


மத்திய அரசில் பணிபுரியும் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்.

ஆகஸ்ட் மாதம் முதல் இது அமல்படுத்தப்படுகிறது; செப்டம்பர் மாதச் சம்பளத்துடன் இந்தத் தொகை அவர்களுக்குக் கிடைக்கும் என இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் சிவராஜ் சிங் சவுஹான், “இதன் மூலம் மாநில அரசுக்கு 625 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும். ஆனால், 7.5 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு இதற்கு முன்பு 31 சதவீத அகவிலைப்படி கிடைத்து வந்தது. கடந்த முறை அதில் 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தற்போது அது மொத்தம் 34 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் அகவிலைப்படிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

x