நன்னடத்தையால் `டீ' மாஸ்டர் வேலை; பைக்குடன் எஸ்கேப் ஆன ஆயுள் கைதி: போலீஸ்காரருக்கு நடந்த அதிர்ச்சி


திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து, சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், மதகநேரி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்(42) இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பாளையங்கோட்டை சிறைத்துறை சார்பில், ஜெயின் வாசலில் ஹோட்டல், சிகையலங்காரக் கடை, பெட்ரோல் பங்க் ஆகியவையும் நடத்தப்படுகிறது. இதில் நன்னடத்தை கைதிகள் பணி செய்வார்கள். டேவிட் நன்னடத்தைக் கைதி என்பதால், சிறைக்கு வெளியே இருக்கும் உணவகத்தில் டீ மாஸ்டராக வேலை செய்துவந்தார். இதேபோல் மாலையில் டேவிட் பரோட்டாவும் போடுவார்.

இந்நிலையில் டீக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த டேவிட், அங்கு போலீஸ் ஏட்டு ஒருவர் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். போலீஸார் தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி டேவிட்டைப் பிடிக்க இரு தனிப்படைகள் அமைத்துள்ளனர். டேவிட் தப்பியோடிய போது பணியில் இருந்த பாளையங்கோட்டை மத்திய சிறையின் முதல்நிலைக் காவலர் கந்தசாமியை, சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

x