நெதர்லாந்தில் சாதித்த தமிழக சப்-இன்ஸ்பெக்டர்: சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!


தங்கம் வென்ற கிருஷ்ணமூர்த்தி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் காவலர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில், தமிழக காவல்துறையைச் சேர்ந்த 12 பேர் கலந்து கொண்டனர். இதில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 5,000 மீட்டர் நடை ஓட்டத்தில் பங்கேற்று, வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கெனவே மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறும் போது, "காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் கலந்துகொண்ட 12 காவலர்களும் பதக்கம் வென்றுள்ளோம். நான், 5,000 மீட்டர் நடை ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றுள்ளேன்" என்றார். இந்நிலையில், வரும் 3-ம் தேதி சென்னை திரும்ப உள்ள காவலர்களுக்கு பல்வேறு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

x