மும்பையை முடக்கிய கனமழை: ரயில்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறை


கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை... ரயில்கள் ரத்து!

மும்பை: மும்பையில் கன மழை காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தன. இதன் காரணமாக அங்கு பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரையிலான 6 மணி நேரத்தில் மும்பையில் பல்வேறு இடங்களில் 300 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக பிரிஹான்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிபார்க்கப்படுவதாகவும் பிஎம்சி தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவைகள் குறிப்பாக மத்திய ரயில்வேயின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாகபுனே-மும்பை டெக்கான் குயின் ரயில் உள்பட பல்வேறு ரயில் சேவைகள் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில், மும்பையில் உள்ள அனைத்து பிஎம்சி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

x