தீவிரமடையும் பருவமழை: கர்நாடகாவில் 10 மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை!


கர்நாடகாவில் 10 மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, பெல்காம், பிதர், கலபுர்கி, யாதகிரி, சிக்கமகளூரு, ஷிமோகாவில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தார்வாட், கடக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர், விஜயப்பூர், பெல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு மாநகர், சித்ரதுர்கா, தாவங்கரே, ஹாசன், குடகு, மாண்டியா, கோலார், ராமநகரா, தும்கூர் ஆகிய இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், கர்நாடகாவின் 10 மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, பெல்காம், பிதார், கலபுர்கி, யாதகிரி, சிக்கமகளூரு, ஷிமோகா ஆகிய இடங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் யல்லாபூர், அடைக்கி, கமலாப்பூர், கொப்பா, ஹூஞ்சடகத்தே, பாலேஹொன்னூர், கம்மரடி, ஹாலியால, ஜேவர்கி, கூடலசங்கமா, கஜூரி, ஆனவட்டி, மூர்நாடு, நாபோக்லு ஆகிய இடங்களில் இன்று அதிகாலையில் மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x