என் பேரன் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து


முன்னாள் பிரதமர் தேவகவுடா

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் எனது பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிறுவனருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்தார்.

ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இதுதொடர்பாக 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

இந்நிலையில் பேரன் பிரஜ்வல் மீதான குற்றச்சாட்டு குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களின் பெயர்களை இப்போது நான் வெளிப்படுத்துவதாக இல்லை. ஆனால் வழக்கு விசாரணையில் அவர்கள் உட்பட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனது பேரன் பிரஜ்வல் மீது தவறு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் போலியானவை. இவ்வாறு அவர் கூறினார்.

x