மாமல்லபுரம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு!


இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை முன்னிட்டு 40 நாட்களில் 75 நகரங்களுக்குச் சென்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரம் வந்தடைந்தது.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று சென்னை வந்தடைந்தது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியைச் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விஸ்வநாதன் ஆனந்திடம் வழங்கினார்.

இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை முன்னிட்டு 40 நாட்களில் 75 நகரங்களுக்குச் சென்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரம் வந்தடைந்தது. அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் ஜெயலட்சுமி கொண்டு வந்த ஜோதியை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. செஸ் வீரர்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜோதி ஒப்படைக்கப்பட உள்ளது.

x