மின்வேலியில் சிக்கி யானை பலி: வனத்துறை தீவிர விசாரணை


மேட்டூரில் மின்சாரம் பாய்ந்து இன்று காலையில் யானை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமுரணாக மின்சாரவேலி அமைத்ததிலேயே யானை பலியாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மேட்டூர் அருகில் உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் கூழ்கரடுதோட்டம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டிய கிராமமான இங்கு அடிக்கடி வன விலங்குகள் வந்து, விவசாய நிலங்களில் சேதம் விளைவிப்பது தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி புஷ்பநாதன் வன விலங்குகளிடம் இருந்து தன் பயிர்களைக் காக்க மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலையில் சென்னாம்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட வடபருகூர் பகுதியில் இருந்து வந்த 35 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று மின்சாரக் கம்பியை மிதித்ததில் இறந்து போனது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்துபார்த்தபோது மின்சாரக் கம்பியில்பட்டு, ஆண் யானை ஒன்று பரிதாபமாக இறந்துகிடந்தது. இதுதொடர்பாக மேட்டூர் வனச்சரகர் அறிவழகன், விவசாயி புஷ்பராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

x