உயிரை மாய்க்க முயன்ற மகள்... கண்கலங்க வைத்த தாயின் கதறல்: நீட் தேர்வால் நடந்த விபரீதம்


திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு சரியாக எழுதாத காரணத்தினால் வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீவிர சிகிச்சை பெற்றுவரும் மாணவியின் தாய் கதறி அழும் வீடியோ காட்சிகள் காண்போர் மனதைக் கரையச் செய்கிறது.

திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஎம் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நீட் தேர்வில் இவரது மகள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் தனக்கு மதிப்பெண்கள் குறைவாகத்தான் கிடைக்கும் என வீட்டில் உள்ளவர்களிடம் புலம்பி வந்துள்ளார். இதையடுத்து மன உளைச்சலிலிருந்த அந்த மாணவி வீட்டிலிருந்த வார்னீஷை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த மாணவியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின்போது மாணவியின் தாய் கதறி அழும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘நீட்டெல்லாம் வேணாம்மா… நீதாம்மா எங்க உயிரு’ எனக் கதறி அழும் காட்சிகள் காண்போர் மனதைக் கலங்கச் செய்கிறது. அப்போது மாணவியின் தாயாரை மருத்துவமனையிலிருந்த ஊழியர்களும், உறவினர்களும் சமாதானப்படுத்தினார்கள். தற்கொலை என்பது தீர்வல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

x