தமிழகத்தில் 91% தனியார் பள்ளிகள் இயங்கின‌: மெட்ரிக்குலேசன் இயக்குநரகம் தகவல்


தமிழகத்தில் இன்று 91% தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின என மெட்ரிக்குலேசன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்2 மாணவி மர்மமாக உயிரிழந்தார். இதையடுத்து, தனியார் பள்ளி மீது பொதுமக்கள் தாக்குதல் நடந்தினர். அப்போது பள்ளியில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் பள்ளி வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனை கண்டித்து இன்று தனியார் பள்ளிகள் செயல்படாது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தன. இதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததுடன் விதிமுறைகளை மீறி விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து இன்று இயங்கிய பள்ளிகளின் பட்டியலை மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 91% தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரிகுலேசன் பள்ளிகள் 89 சதவீதமும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95 சதவீதமும், சிபிஎஸ்இ பள்ளிகள் 86 சதவீதமும் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x