பிரம்பால் சரமாரியாக அடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்... கிழிந்த மாணவனின் தோல்: கல்வித்துறை காட்டிய அதிரடி


பணியிடை நீக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மோகன், மாணவனை கொடூரமாகத் தாக்கிய விவகாரம் காவல்நிலையம் வரை சென்றது. இதனிடையில் இவ்விவகாரத்தில் இன்று ஆசிரியர் மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், சூரங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஷேக் முகமது என்னும் மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிலதினங்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றபோது ஒரு நோட்டை மட்டும் மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். நோட்டு ஏன் கொண்டுவரவில்லை? எனக் கேட்டு ஆசிரியர் மோகன் பிரம்பால் சரமாரியாகத் தாக்கினார். இதனால் உடலின் பல்வேறு பகுதிகளிலும் தோல் கிழித்திருந்தது.

மாணவனின் பெற்றோர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியர் மோகனின் கொடூரத் தாக்குதலை அம்பலப்படுத்தும் வகையில் தங்கள் மகனின் உடலில்பட்ட காயங்களை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலும் ஆனது. இதுகுறித்து மாணவன் ஷேக் முகமது தரப்பில் ஈத்தாமொழி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதே விவகாரம் குறித்து கல்வித்துறையும் விசாரித்து வந்தது. இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி ஆசிரியர் மோகனை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

x