சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனிலும் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இன்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை வாங் ஸீ ஆகியோர் மோதினர். இந்தப் போட்டியில் 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை சிந்து தோற்கடித்தார்

இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் பி.வி.சிந்து சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கொரியா ஓபன் மற்றும் சுவிஸ் ஓபனில் வெற்றி பெற்ற பிறகு 2022-ல் சிந்து வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

27 வயதான இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வெல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை ஆவார். முன்னதாக 2010-ம் ஆண்டில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதன் முறையாக சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார்.

x