ஆண்- பெண் பாலின இடைவெளி குறியீடு பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?


ஆண்-பெண் பாலின இடைவெளி குறியீடு பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. அனைத்துத்துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு முட்டுக்கட்டையாக சில கட்சிகள் இருக்கின்றன.

இந்நிலையில், பொருளாதார பங்கேற்பு, கல்வி பெறுதல், சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஆண்-பெண் பாலின இடைவெளி குறியீடு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன.

135-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. அண்டை நாடுகளான வங்கதேசம் 71-வது இடத்திலும், நேபாளம் 96-வது இடத்திலும், இலங்கை 110-வது இடத்திலும், பாகிஸ்தான் 145-வது இடத்திலும் உள்ளன. மேலும் "உடல்நலம் மற்றும் உயிர்வாழும்" துணைக் குறியீட்டில் 146-வது இடத்தில் இந்தியா உள்ளது.

x