"இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா உருக்கமாக கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவிர்த்து வருகிறது. மக்கள் அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு விலைவாசிகள் விண்ணை தொட்டுவிட்டது. கடந்த சில மாதங்களாக மக்கள், தேவைகளை பூர்த்தி செய்ய நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இனி வாழவே முடியாது என்ற நிலையில் அங்குள்ள தமிழர்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இது அந்நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஓரளவு தீர்க்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகிறது. இருந்தாலும் மக்களின் தேவைகள் முழுமையாக தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா. இதில், "இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே இந்தியா மிகவும் உதவியாக இருந்தது. பல்வேறு உதவிகளை அளித்துள்ளது. நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இலங்கைக்கு இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது" என்று கூறியுள்ளார்.