சாலையைக் கடக்க முயன்ற சிறுவன்... தூக்கி வீசிச் சென்றது பைக்: இரவில் வீட்டின் முன்பு நடந்த துயரம்


விபத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 6 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பொட்டல்குழி பகுதியைச் சேர்ந்தவர் சகாய வால்டர். புகைப்படக் கலைஞராக உள்ளார். இவரது மகன் டஸ்கின் ஜோந்த்(6) அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்துவந்தார். டஸ்கின் தன் வீட்டு முன்பு உள்ள சாலையைக் கடக்க முயன்றபோது அம்மாண்டிவிளையில் இருந்து திருநயினார்குறிச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது. இதைப்பார்த்த டஸ்கின் பெற்றோர் அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு டஸ்கின் ஜோந்த் உயிர் இழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணவாளக்குறிச்சி போலீஸார் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சின்னவிளையைச் சேர்ந்த பென்கர் கிரோஷியா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஆறுவயதுச் சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதிவாசிகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

x