418 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகம்: குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


ஆதிகேசவப் பெருமாள்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு வரும் 6-ம் தேதி, புதன்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் பிரசித்திபெற்ற ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. இது 108 வைணவத் தலங்களிலும் ஒன்று. இந்த ஆலயத்தில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

12 தலைமுறைகளுக்குப் பின்பு நடக்கும் கும்பாபிஷேகம் என்பதால் தமிழகம், கேரளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்பதால் குமரிமாவட்டத்திற்கு புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தநாளில் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்றாலும், கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட அளவுக்கு பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக நிகழ்வில் லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என அறநிலையத்துறை கணித்துள்ளது. அதற்காகவே, நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர்.

x