காலரா பரவுவதால் காரைக்காலில் 144 தடை உத்தரவு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் காரைக்காலில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசரநிலையை அரசு அறிவித்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் மக்களை பீதியடையந்துள்ளனர்.
காரைக்காலில் சாக்கடை நீர் செல்லும் பகுதிகளின் குறுக்கே செல்லும் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, அதன் மூலமாகச் சாக்கடை நீர் தண்ணீரில் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 700 பேர் வரை காலரா, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காரைக்காலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார். இன்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிலருக்கு காலரா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் ஒரே இடத்தில கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர் தொட்டிகளைச் சுத்தப்படுத்தவும், குளோரினேசன் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காலரா பரவல் எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலராவைக் கட்டுப்படுத்தும் வரை இந்த விடுமுறை நீடிக்கும் என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

x