தலைகீழாக தூக்கி செல்லப்பட்ட நாய்... பைக்கில் சாகசம் காட்டிய இளைஞர்கள்: காவல்துறை காட்டியது அதிரடி


நாய்க்குட்டியின் காலை பிடித்து தலைகீழாக தூக்கிச் சென்ற இளைஞர்கள்

பழநி நகரின் மையப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியின் காலை பிடித்து தலைகீழாக தூக்கிச் சென்ற சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் நாய்க்குட்டி ஒன்றின் பின்னங்காலை பிடித்துக் கொண்டு தலைகீழாக சாலையில் வளைந்து, வளைந்து சாகசத்தில் ஈடுபடுவது போன்று வாகனத்தில் சென்றுள்ளனர்.

வளைந்து வளைந்து சாலையில் சென்ற இளைஞர்கள்

இது குறித்து, விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு நலன் அமைப்பைச் சேர்ந்த கண்காணிப்பாளர் முத்துசாமி பழநி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விலங்குகளை கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். மகுடீஸ்வரன், அரவிந்தராஜ் ஆகிய இருவரையும் இன்று கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

x