10 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1000 கோடி ஊழல்: அதிர்ச்சியைக் கிளப்பும் அமைச்சர் ஐ.பெரியசாமி!


அமைச்சர் பெரியசாமி

பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கத்தில் சுமார் ரூ. 1000 கோடிகள் ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட வீரகல்லில் கூட்டுறவுத் துறை சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

விழாவின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர், "கடந்த ஆட்சிக்காலத்தில் மாநில அரசு ஐந்து கல்லூரிகளை கூட திறக்கவில்லை. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் ஆயிரத்து 435 ரூபாய் மதிப்பீட்டில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்க சேர்ந்து வருகின்றனர்" என்றார்.

மேலும், "கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற ஊழல்களை கண்டறிவதற்காக ஒரு சட்டக் குழுவை அமைத்தோம். அதன்படி, பத்து ஆண்டுகள் ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ. 1000 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் கூட்டுறவு சங்க ஊழல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்" என்றார்.

x