இலங்கையில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பு அதிகாரி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடால் தனியார் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடுவலை ஜல்தர பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது அதிகாரி, கோனஹேன அதிரடிப்படை முகாமில் ஆயுதக் களஞ்சிய பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை முகாமிலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.