1,900 நிர்வாண படங்கள்... 400 ஆபாச வீடியோக்கள்: நாகர்கோவில் காசியின் செல்போனைப் பார்த்து அதிர்ந்த நீதிபதி!


பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி. இவ்வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதி அதிர்ச்சியளிக்கும் விசயம் ஒன்றைத் தெரிவித்தார்.

காசியின் தந்தை தங்கபாண்டி

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி ஏராளமான இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியே அவர்களிடம் பணம் வசூல் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரால் கடந்த 2020-ம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டார். காசியின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். காசி அந்த வீடியோக்கள், புகைப்படங்களை தன் தந்தை தங்கபாண்டியனுக்கும் அனுப்பி இருந்தார். அவர் கடையில் இருந்தே காசியின் லேப் டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதனால் அவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தங்கபாண்டியன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடந்தது. சிபிசிஜடியும், தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அறிக்கைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணையின் போது நீதிபதி புகழேந்தி, ‘காசியின் செல்போனில் 1,900 நிர்வாணப் படங்கள், 500 வீடியோக்கள் உள்ளன. இது ஏற்கக் கூடியது இல்லை. தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்படும் ஆபத்து இருக்கிறது ”என சொல்லி ஜாமீன் மனுவை நிராகரித்தார். நீதிபதி செல்போன் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியோடு பகிர்ந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x