மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் சபதம் செய்தபடி ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் ராஜினாமா


புதுடெல்லி: ராஜஸ்தான் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில அமைச்சர் கிரோடி லால் மீனா தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுப் பிரார்த்தனை கூட்டத்தின் மேடையிலேயே அவர்இந்த திடீர் ராஜினாமா செய்தியைஅறிவித்தது அவரது கட்சியினர்மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மூத்த (பழங்குடியின) தலைவர் கிரோடி லால் மீனா. இவர் ஐந்துமுறை எம்எல்ஏவாகவும், இரண்டுமுறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்த நிலையில், உணவு மற்றும்பேரிடர் மேலாண்மை துறையை கவனித்து வந்த கிரோடி லால் மீனாஅந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அதுமட்டுமின்றி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

வெற்றி கிடைக்கவில்லை: கிரோடி லாலின் சொந்த ஊர் கிழக்கு ராஜஸ்தானில் உள்ள தவுசாநகரம் ஆகும். இங்குள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் பாஜக தோற்றால் கூட தனதுபதவியை ராஜினாமா செய்வேன் என்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கிரோடி லால் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில்,எதிர்பார்த்த வெற்றியை பாஜகபெறாததால் அதற்கு பொறுப்பேற்கும் வகையில் ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து விலகும்முடிவை கிரோடி லால் எடுத்துள்ளார்.

x