பிளஸ்1 பொதுத் தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி: பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!


பிளஸ்1 பொதுத் தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ- மாணவியர் எழுதிய 11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. அதன்படி, 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.99 சதவீதமும், மாணவர்கள் 84.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 10.13 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

95.56 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 95.44 சதவீதம் பேர் வெற்றியுடன் 2-வது இடத்தை விருதுநகர் பிடித்துள்ளது. 95.25 சதவீதம் பேர் வெற்றியுடன் 3-வது இடத்தை மதுரை பிடித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x