பயணிகளின் கவனத்துக்கு!- ரத்து செய்யப்பட்ட 34 ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது!


கரோனாவால் ரத்து செய்யப்பட்டிருந்த 34 ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருச்செந்தூர் - திருநெல்வேலி(06405/06409), மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை(06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

திருச்சி - ஈரோடு (06809/06810), திருச்சி - ஈரோடு(06611/06612) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 9-ம் தேதியில் இருந்தும், அரக்கோணம் - கடப்பா (06401/06402), கோவை - சேலம் (06802/06803), திருச்சி - கரூர்(06881/06882), சேலம் - கரூர் (06821/06822) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 27-ம் தேதியில் இருந்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர் - திருச்சி (06683), திருச்சி - காரைக்கால் (06880), காரைக்கால் - தஞ்சாவூர்(06457) முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 23-ம் தேதி, விழுப்புரம் - மயிலாடுதுறை (06991/06990) முன்பதிவில்லா ரயில் ஜூலை 11-ம்தேதி, தஞ்சாவூர் - காரைக்கால் (06832) ரயில் ஜூலை 24-ம் தேதி உட்பட தெற்கு ரயில்வேயில் 34 முன்பதிவில்லா ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x