சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் சமூகவலைதளங்கள் மூலம் கேள்வி- பதில் மூலம் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் 'குக் வித் கோமாளி' புகழ் ஷிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் சில சுவாரஸ்யமான கேள்வி- பதில்களை பார்க்கலாம்.
உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பற்றி வதந்தி பரப்புபவர்கள் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்களை அது போல பேசாமல் இருக்க செய்ய முடியாதா?
அதுபோல வதந்திகள் பரப்புபவர்களை பேசாமல் இருக்க செய்வதற்கும், அவர்களை ப்ளாக் செய்வதற்கும் எனக்கு எந்த உரிமையும் இல்லை. பாசிட்டிவ் விஷயங்கள், வதந்தி, வெறுப்பு என எல்லாமே வந்து கொண்டுதான் இருக்கும். நான் அதை எதிர்கொள்ள பழகி விட்டேன். அதே சமயம், அர்த்தமில்லாத வெறுப்பையும் ஊக்குவிக்க மாட்டேன். அப்படியே சிரித்து கடந்து விடுவேன்.
இப்போதிருக்கும் பெண்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?
அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஒரு விஷயம் மட்டும். 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல'. உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.
சூப்பர் சிங்கர் சிவாங்கிக்கும் இப்போது 'குக் வித் கோமாளி3' சிவாங்கிக்கும் அதிக முதிர்ச்சியாக விஷயங்களை கையாளுவதாக தெரிகிறதே?
ஆமாம்! மனதளவிலும் உடலளவிலும் முதிர்ச்சியாக இப்போது உணர்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது. நிறைய ஏற்ற இறக்கங்கள், பாடங்கள் பார்த்து விட்டேன். அப்படியே போய் கொண்டிருக்கிறேன். பார்ப்போம், இன்னும் வேறு என்னவெல்லாம் எனக்கு பார்க்க வேண்டி இருக்கிறது என்று.
'டான்' படத்திற்கு பின்பு உங்களுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது?
இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. நிறைய மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்துள்ளது. ஆனாலும் நிறைய கற்று கொள்ள இருக்கிறது. எல்லோருக்கும் நன்றி.
உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்?
மனதால் அழகாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.